கோவை.
கோவையில் இன்று ஜிக் என்று சொல்லக்கூடிய swiggy, ஜொமேடோ, இன்ஸ்டா மார்ட் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அவர்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 10 வீதம் கணக்கிட்டு வழங்கிட வேண்டும், ஜிக் தொழிலில் ஈடுபட்டு வரும் அனைவரையும் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும், பொருட்களை எடுத்துச் செல்லும் இடத்திலிருந்து கொண்டு சேர்க்கும் இடத்திற்குமான ஊதியமாக ஒரு கிலோமீட்டருக்கு 18 வீதம் கணக்கிட்டு வழங்கிட வேண்டும், விசாரணை அல்லது விளக்கம் கூறாமல் தொழிலாளர்களின் கணக்குகளை முடக்க கூடாது, பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கிட வேண்டும், அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி மற்றும் இ எஸ் ஐ மருத்துவம், விபத்து காப்பீடு வசதிகளை உடனே அமலாக்க வேண்டும், தொழிலாளர்களிடத்தில் பிடித்தம் செய்து வரும் டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி சங்கத்தின் மாநில செயலாளர் எம்.ஆறுமுகம் எக்ஸ்.எம்.எல்.ஏ., .தலைமை தாங்கினார். வழக்கறிஞர் எல்.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சில் செயலாளர் சி.தங்கவேல், மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, பி.சுப்பிரமணியம், என் சந்திரன், மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், ஏஐடியூசி நிர்வாகிகள் சோமு, மூர்த்தி, கோகுல், காளீஸ்வரன், சிலம்பரசன் மற்றும் வங்கி ஊழியர் சங்கம் சையது இப்ராஹிம், பாஷா, இஸ்கப் மாவட்ட செயலாளர் எம்.பி.ராஜன், கலை இலக்கியப் பெருமன்றம் ஜான், மாநில குழு உறுப்பினர் கலை அஸ்வினி, எம் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.